Reading Time: < 1 minute

கனடா முழுவதும் பழங்குடியின மக்கள் நாள் நிகழ்வுகள் மகிழ்ச்சியுடனும், உணர்வுபூர்வமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.

Tamil Business Directory

பல்வேறு நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவின் ஒருபுறம் மகிழ்ச்சி, கலாச்சார கொண்டாட்டமாக இருந்தாலும், மறுபுறம் பூர்வீக மக்களின் உரிமைகள் மீதான கவலைகளும் தொடர்ந்து பேசப்பட்டன.

டொரண்டோவின் பொர்ட் யோர்க் Fort York தேசிய வரலாற்று நினைவிடத்தில் நடைபெற்ற நா மீ ரெஸ் Na-Me-Res பாரம்பரிய பொவ் Powwow மற்றும் பழங்குடியின Indigenous கலை விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நகர மேயரான ஒலிவியா சௌ, இந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். டொரொண்டோ, வான்கூவார், ஒட்டாவா, மானிடோபா உள்ளிட்ட பல இடங்களில் பழங்குடியின மக்கள் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதேவேளை, பூர்வீக சமூகங்களுடன் முழுமையாக கூட்டாண்மை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் நாம் செயல்படுகிறோம் என பிரதமர் கர்னி தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பூர்வீக மக்களின் பங்களிப்பு முக்கியம்,” என கூறினார்.