Reading Time: < 1 minute

றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு செல்வது தேவையற்ற தாமதங்களை தவிர்க்க வழியமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்கள் இன்றைய தினம் பியர்சன் விமான நிலையத்திற்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக விமான நிலையத்திற்குள் உரிய நேரத்தில் பிரவேசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை ஊழியர்கள் தற்பொழுது கவனயீர்ப்பு போராட்டங்களில் குதித்துள்ளனர்.

கடந்த ஒன்பது நாட்களாக , சுமார் 155000 பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.