Reading Time: < 1 minute

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் ஆதரவுடன் நடைபெறவுள்ள கனடா சூப்பர் 60 டி:10 லீக்கில் விளையாடுவதற்காக 1300க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Tamil Business Directory

பதிவுகளில் 34 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,135 ஆண் மற்றும் 235 பெண் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

ஃபின் ஆலன், சிக்கந்தர் ராசா, நசீம் ஷா, அலெக்ஸ் ஹேல்ஸ், ஷமர் ஜோசப், ஜேசன் ராய், கேஷவ் மகாராஜ், டிம் சீஃபர்ட், டிம் சவுத்தி, ஜிம்மி நீஷம், அசாம் கான், லுங்கி நிகிடி, ரிலீ ரோசோவ், கிறிஸ் லின், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரே பிளெட்சர், கைல் மேயர்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பானுகா ராஜபக்ஷ, மார்ட்டின் குப்தில், டேவிட் மாலன், மெஹிடி ஹசன் மிராஸ், டான்சித் ஹசன் தமீம், சாட் போவ்ஸ் மற்றும் குடகேஷ் மோதி ஆகியோர் எட்டு அணிகள் கொண்ட லீக்கில் பங்கேற்க ஒப்புக்கொண்ட முன்னணி ஆண் சர்வதேச வீரர்களில் அடங்குவர்.

இந்த லீக்கில் குறுகிய கால 10 ஓவர்கள் கொண்ட போட்டி இடம்பெறுகிறது.

போட்டிகள் சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும், ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் (60 பந்துகள்) துடுப்பாட்டம் செய்யும்.

போட்டிகளானது எதிர்வரும் ஜூலை மாதம் பிராம்ப்டனில் அமைந்துள்ள CAA கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.