Reading Time: < 1 minute

கனடாவின் சஸ்கட்ஸ்வான் மாகாணத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Tamil Business Directory

ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுழற்சி முறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.

சஸ்கட்ஸ்வான் ஆசிரியர் ஒன்றியம் இந்தப் போராட்டம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த மாதம் இரண்டு தடவைகள் ஆசிரியர்கள் மாகாணத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமெனவும் ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.