Reading Time: < 1 minute

கனடாவின் ஓண்டேரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் எட்டோபிக்கோ வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரை திருட முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இவ்வாறு காரை திருட முயற்சித்தவர்கள் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

“நால்வர், முகமூடிகள் அணிந்து, தெருவில் வேகமாக வந்து என் டிரைவ்வேயில் இருந்த காரை எடுத்து செல்ல வந்தார்கள்,” என ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் குற்றவியல் நீதித்துறையை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். குறித்த நபர்களை ‘முட்டாள் குற்றவாளிகள்’ என அவர் விவரித்துள்ளார்.

ஒன்றாரியோ மாகாண பொலிஸாரின் (Ontario Provincial Police) பாதுகாப்புப் பிரிவு கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் சந்தேக நபர்களை கைது செய்ததாக டொராண்டோ பொலிஸார், தெரிவித்திருந்தனர்.

அந்த வாகனம் ஒரு டிரைவ்வேயை அணுகும் போது போலீசார் அதை நிறுத்தி விசாரித்தனர்.

இதில் ஒருவர் ஓடி தப்ப முயற்சித்ததாகவும், அருகே அவரை பிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான நான்கு பேரில் இரண்டு பேர் 17 மற்றும் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள் மோட்டார் வாகனங்களை திருட பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை எனவும் முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார்.