Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவாவின் எல்மிரட்ஜ் கார்டன் குடியிருப்பை சேர்ந்த மக்கள் எலித் தொல்லையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

பாரிய எண்ணிக்கையிலான எலிகள் தங்களது குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எலிகளை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே எலிகளை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சியின் உதவியை இந்த மக்கள் நாடியுள்ளனர்.

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக் கணக்கான டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பெறுமதியான பொருட்களை எலிகள் சேதப்படுத்த விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.