Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கனேடிய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ட்ரக் ஒன்றை சோதனையிட்டார்கள்.

Tamil Business Directory

மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் அந்த ட்ரக்கை சோதனையிட்ட அதிகாரிகள், அந்த ட்ரக்கில் உடைமைகள் வைக்கும் பைகளுக்குள் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

16 பைகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த அந்த போதைப்பொருளின் எடை, 266. 4 கிலோகிராம் ஆகும்.

ஒன்ராறியோவைச் சேர்ந்தவரான அந்த ட்ரக்கின் சாரதியான 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கனேடிய பொலிசாரிடம் ஒப்படைக்க, அவர் நீதிபதியின் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.