Reading Time: < 1 minute

கனடாவின் புதிய ஜனநாயகக் (NDP) கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கூட்டாட்சித் தரத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ள கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைமைத் தேர்தலில் 56% ஆதரவு பெற்று, 39,734 உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற லிவிஸ், “எங்கள் கட்சி மீண்டும் எழுகிறது” என உறுதியளித்தார்.

புதிய தலைவர் தனது உரையில், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களையும், டிரம்ப் தலைமையிலான உலக அரசியல் சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.

சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கனடாவின் முக்கிய அரசியல் கட்சிகள் செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பணக்காரர்களுக்காக அல்ல, பொதுமக்களுக்காக செயல்படும் அரசை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.

அவி லிவிஸ் ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.