பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண துறைமுகத்தில் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த கைப்பற்றுதல், ஒன்டாரியோவை தளமாகக் கொண்ட அமைப்புசார்ந்த குற்றக் குழுவுடன் தொடர்புடையது என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விசாரணையில் வாகனத் திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் 30 பேருக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கூட்டு விசாரணையை நயாகரா போலீசார் முன்னெடுத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள்,குறிப்பாக பல மின்னணு சாதனங்கள் மீதான விரிவான நுண்ணறிவியல் ஆய்வுகள் மூலம் முக்கிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய துறைமுகத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பத் தயாராக இருந்ததாக நம்பப்படும் 43 திருடப்பட்ட வாகனங்கள் (மதிப்பு சுமார் 3.8 மில்லியன் டாலர்) கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஒன்றாரியோவைச் சேர்ந்த வயதான கெயர் மெக்கால், ஹமில்டனைச் சேர்ந்த 32 வயதான டியூடர் சோப்டீரியன், எடோபிகொக் பகுதியைச் சேர்ந்த 43 வயதான டேஜன் ஸ்லோஜோ ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.