Reading Time: < 1 minute

கனடாவில் 7 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள 325 கிலோ கொகேய்ன் போதைப்பொருளுடன் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணை இந்த வாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது டர்ஹம் போலீஸ் சேவையின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

போதைப்பொருள் விற்பனை நோக்கில் கொகேய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவன் முதலில் காவலில் எடுக்கப்பட்டார்.

தொடர்ந்து, விசாரணையாளர்கள் டொராண்டோ நகரிலுள்ள ஒரு இடத்தில் சோதனை உத்தரவை நிறைவேற்றினர். அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, 325 கிலோ கொகேய்ன் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதைப்பொருளின் மொத்த சந்தை மதிப்பு 7 மில்லியன் டாலருக்கும் அதிகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் உள்ளவர்கள் முன்வந்து போலீசாரின் போதைப்பொருள் தடுப்பு பிரிவை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கைது, கனடாவில் இளைஞர்கள் தொடர்பான போதைப்பொருள் வியாபாரத்தின் தீவிரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.