Reading Time: < 1 minute

கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் 19 நாய்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

குறித்த நபர் ஒன்றாரியோவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மிருக வதையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டிலிருந்து 19 நாய்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் நாய்க்குட்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கவனயீனமாக ஆயுதங்களை பயன்படுத்தியாகவும் விலங்குகளை சித்திரவதை செய்ததாகவும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணத்தினால் குறித்த நபர் நாய்களை கொன்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.