Reading Time: < 1 minute

கனடாவில் 15 வயதான சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் டொரன்டோ பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வெஸ்டர்ன் காலிகேட் கல்லூரியில் தரம் 11 க்காக பாடசாலை செல்ல காத்திருந்த சிறுவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிளாசா பகுதியில் வாகன தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் சிலருடன் முதலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பற்றிய இவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

ரொறன்ரோவில் கடந்த வார இறுதி நாட்களில் 11 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் இதில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் கனடிய பொலிஸ் நிலையமொன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.