Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் நயகரா பிராந்தியத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாகனங்களை களவாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடிய வாகனம் ஒன்றில் பயணித்த போது இந்த சிறுவன் பெண் ஒருவரை மோதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே போலீசார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்ஃ
விபத்தில் படுகாயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை மேற்கொண்ட சிறுவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசேரணிகளின் போது இந்த வாகனத்தை செலுத்தியது 13 வயது சிறுவன் என கண்டறியப்பட்டுள்ளது.
விபத்து மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




