Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ ஹெலிகொப்டர் விபத்தில் காணாமல் போன இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

சினூக் ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தனர்.

இந்த ஹெலிகொப்டரில் நான்கு பேர் பயணம் செய்திருந்தனர்.

கனடிய விமானப்படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய இரண்டு பேர் காணாமல் போயிருந்த நிலையில் ஒட்டாவா நதியில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

படைவீரர்களின் மரணத்திற்கு கனடிய படைகளின் கூட்டுத்தளபதி ஜெனரல் வெயின் ஐரே தனது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.