Reading Time: < 1 minute

கனடாவில் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

பிரதான எதிர்க்கட்சியான கொன்சேவடிவ் கட்சிக்கு மக்கள் ஆதரவு கூடி வரும் நிலையை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொன்சேவடிவ் கட்சிக்கான மக்கள் ஆதரவு 34.9 வீதமாகவும், லிபரல் கட்சிக்கான ஆதரவு 28.9 வீதமாகவும், என்.டி.பி கட்சிக்கான மக்கள் ஆதரவு 22.2 வீதமாகவும் காணப்படுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

லிபரல் கட்சிக்கான ஆதரவு 0.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, கொன்சேவடிவ் கட்சிக்கான ஆதரவு 0.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஜக்மீட் சிங் தலைமையிலான என்.டி.பி கட்சிக்கான ஆதரவு 2.4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

நனோஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.