கிழக்கு டொராண்டோவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் உரிமையாளர், தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதால், அவருக்கு சிறைத்தண்டனையும் பெரும் தொகையை அபராதமாகவும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈஸ்ட் யார்க் பகுதியில் உள்ள ‘608 டாஸ் ரோடு’ என்ற கட்டிடத்தின் உரிமையாளரான கரோலின் கிரெப்ஸ், தீ பாதுகாப்பு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, கரோலின் கிரெப்ஸுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 120,000 டொலர் அபராதமாகவும், அதனுடன் கூடுதலாக 25 சதவீத கட்டாயப் பாதிக்கப்பட்டோர் அபராத கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோலினுக்குச் சொந்தமான ‘500 டாஸ் வீதி என்ற மற்றொரு கட்டிடமும் தீ பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, தற்போது டொராண்டோ தீயணைப்புத் துறையின் தொடர் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்டாரியோ தீயணைப்பு விதிகளின் கீழ் சொத்து உரிமையாளர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த விதிமுறைகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.