Reading Time: < 1 minute

கனடாவில் விமானத்தில் குழப்பம் விளைவித்த 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ரொறன்ரோவிலிருந்து கல்கரி நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் பயணித்த 16 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த 16 வயது இளைஞர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளார்.

விமானத்தில் மோசமாக நடந்து கொண்ட காரணத்தினால் விமானம் வின்னிபிக்கில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த சக பணி ஒருவரை குறித்த 16 வயது இளைஞர் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் பணியாளர்களும் ஏனைய பயணிகளும் கூட்டாக இணைந்து குறித்த 16 வயது இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.