Reading Time: < 1 minute

கனடாவில் வாகனத்தை மோதச் செய்து ஐந்து பேரை காயப்படுத்தி தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த மாதம் ரொறன்ரோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்த வாகன விபத்தில் ஐந்து பாதசாரிகள் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றுடனும் இந்த நபர் தொடர்புபட்டிருந்தார் எனவும் அதன் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

24 வயதான ரயன் பெட்ரோப் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.