Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் சில வாகனங்களுக்கு தீமூட்டிய சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு வாகனங்களுக்கு தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே இவ்வாறு வாகனங்களுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக யோக் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை வேளையில் இவ்வாறு வாகனங்கள் மீது தீ மூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்களின் மீது எரிபொருட்களை ஊற்றி தீ மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.