Reading Time: < 1 minute

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கப்பட்ட லொத்தர் சீட்டுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

Tamil Business Directory

இது தொடாபில் அதிகாரபூவமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 70 மில்லியன் டொலர்களை வென்றெடுத்திருந்தார்.

எனினும் கடந்த ஆண்டு வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகைக்கு, லொத்தர் சீட்டு காலாவதியாகும் வரையில் எவரும் உரிமை கோரவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி ஸ்காப்ரோவில் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்பய்பட்டுள்ளது.

இந்த பரிசுத் தொகைக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உரிமை கோரியிருந்தனர்.

இந்த அனைத்து உரிமை கோரல்களும் விரிவாக ஆராய்பபட்டு அவை அனைத்தும் போலிக் கோரிக்கைகள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த பரிசுத் தொகைக்கு எவரும் உரிமை கோரவில்லை என்பதனை லொத்தர் சீட்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.