Reading Time: < 1 minute

கனடாவில் ரைடு-ஷேர் சேவையை பயன்படுத்திய இளம் வயது பெண்ணை குறிவைத்து வாகன ஓட்டுநர் ஒருவர் நடத்தியதாக கூறப்படும் தகாத செயல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

2025 ஜூன் 1ஆம் திகதி, லண்டன் நகரில் டுன்டாஸ் மற்றும் அடிலெய்ட் பகுதியில் இருந்து ஒரு இளம் பெண் ரைடு-ஷேர் செயலி மூலம் பயணத்தை பதிவு செய்திருந்தார்.

பயணம் தொடங்கிய சில நேரங்களில், ஓட்டுநர் வழக்கமான பாதையை விட்டு விலகி, வேறும் ஓர் வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர், பாதிக்கப்பட்டவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்ற ஓட்டுநரின் செயலைத் தொடர்ந்து, அந்த பெண் பொலிஸார் தொடர்புகொண்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பெப்ரவரி 10ஆம் திகதி பொலிஸில் சரணடைந்தார்.

பாலியல் துஷ்பிரயோகம், 16 வயதிற்கு குறைந்தவரை பாலியல் தொடுதலுக்கு அழைத்தல் மற்றும் 16 வயதிற்கு குறைந்தவருடன் தகாத தொடர்பு என பல கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்த நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன.

ஆனால் அதிர்ச்சிகரமான முறையில், கைது செய்யப்பட்ட பின்னரும், அவர் தனது விடுதலை நிபந்தனைகளை மீறி, போலியான பெயரில் தொடர்ந்து ரைடு-ஷேர் சேவையில் ஓட்டுநராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனால், பெப்ரவரி 24ஆம் திகதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீண்டும் விடுவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.