Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரயில் பணியாளர்களின் போராட்டம் தொடர்வதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ரயில் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் நாடு தழுவிய போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான கணிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகரப் பகுதிகளுக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளன.
இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
GO ட்ரான்சிட் சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இவ்வாறு முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




