Reading Time: < 1 minute

கனடாவின் கோட்ரேஜ் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் மோசடி சம்பவம் ஒன்றில் சிக்கி 33000 டொலர்களை இழந்துள்ளனர்.

Tamil Business Directory

ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது.

தொலைபேசி ஊடாக இந்த மோசடி இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி இந்த தம்பதியினரை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

கடன் அட்டை தகவல்களைப் பெற்றுக் கொண்டு மோசடி இடம் பெற்றுள்ளது.

வாங்கி தகவல்களை வழங்கி சில மணித்தியாலங்கள் இவ்வாறு பணம் களவாடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு எனினும் வாங்கி தகவல்கள் கடனட்டை, வங்கி அட்டைகள் குறித்த தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.