Reading Time: < 1 minute

கனடாவின் மொன்றியலில் 3 வயது சிறுமி காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், மூன்று வயது சிறுமி க்லேர் பெல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரான 34 வயதுடைய ரேச்சல்-எல்லா டாட் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சிறுமியை கைவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

க்லேர் பெல் கடைசியாக ஞாயிறு காலை 9.45 மணியளவில் LaSalle பகுதியில் உள்ள நியுமென் பொலிவார்ட் Newman Boulevard அருகே தனது வீட்டுக்கு அருகில் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியின் தாயார் குழந்தையை காணவில்லை என பின்னர் கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தையை கண்டு பிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.