Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூன்று நாய்களை சுட்டுக் கொன்றுள்ளார்.
பெண் ஒருவரை தாக்க வந்த நாய்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பெண்ணை காப்பாற்ற முயற்சித்தபோது குறித்த நாய்கள் பொலிஸ் உத்தியோகத்தரையும் கடிக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதனால் மூன்று நாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாய் கடிக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




