Reading Time: < 1 minute

அதிர்ஷ்ட தேவதை ஒருவருக்கு மீண்டும் மீண்டும் கதவைத் தட்டுவது அரிதான விடயம். ஆனால், கனடாவின் வடக்கு ஒன்டாரியோவைச் சேர்ந்த மார்செல் லெக்லேர் (Marcel Leclaire) என்பவருக்கு இது மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

Tamil Business Directory

அண்மையில் அவர் விளையாடிய லாட்டரியில் 88,888 டாலர்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சட்பரி பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஓய்வுபெற்ற டாக்ஸி ஓட்டுநரான மார்செல், கடந்த 40 ஆண்டுகளாக லாட்டரி விளையாடி வருகிறார்.

இம்முறை அவர் ‘Instant Lunar 8s’ என்ற ஸ்கிராட்ச் கார்டைத் தேர்வு செய்ததற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு என குறிப்பிடுகின்றார்.

ஹாக்கி வீரர் டேவிட் பாஸ்டர்னாக்கின் (David Pastrňák) தீவிர ரசிகரான லெக்லர், அந்த வீரரின் ஜெர்சி எண் 88 ஐ லாட்டரி சீட்டில் 8 என்ற எண்ணைக் கண்டதும், தனது அபிமான வீரரின் நினைவாக அந்த டிக்கெட்டை கொள்வனவு செய்துள்ளார்.

அதுவே அவருக்குப் பெரிய பரிசைப் பெற்றுத் தந்துவிட்டது. மார்செல் லெக்லேர் இதற்கு முன்பும் மிகப் பெரிய தொகைகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது:

  • 2017-ல்: ‘Encore’ விளையாட்டின் மூலம் $1 மில்லியன் டாலர்கள் (சுமார் 10 லட்சம்).
  • 2025-ல்: ‘Instant Platinum’ மூலம் $3 மில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம்).
  • 2026-ல்: இப்போது ‘Instant Lunar 8s’ மூலம் $88,888 டாலர்கள். “டிக்கெட்டைச் சரிபார்த்தபோது நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். முதல்முறை வென்றபோது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ, அதே உணர்வு இப்போதும் ஏற்பட்டது,” என மார்செல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வெற்றித் தொகையை வைத்து ஒரு புதிய வீடு மற்றும் அதற்குத் தேவையான தளபாடங்கள் (Furniture) வாங்க மார்செல் திட்டமிட்டுள்ளார். எஞ்சிய தொகையைத் தனது எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.