Reading Time: < 1 minute

கனடாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான ஏட்ரியன் வாக்கர் (Adrian Walker), அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை அறிவித்துள்ளது.

Tamil Business Directory

மே 7, 2024 அன்று அதிகாலை, டொராண்டோவின் வினோனா டிரைவ் மற்றும் வாகன் சாலை (Winona Drive and Vaughan Road) பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் 31 வயதான ட்ரெவர் டால்டன் ஜான் (Trevor Dalton John) உயிரிழந்தார்.

அவருடன் இருந்த ஒரு பெண் படுகாயமடைந்தார் இந்த ஆண்டு தொடக்கத்தில் BOLO (Be On The Lookout) திட்டத்தால் வெளியிடப்பட்ட கனடாவின் 14-வது மிக முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ஏட்ரியன் வாக்கர் இடம் பெற்றிருந்தார்.

மிசிசிப்பியின் ஆக்ஸ்போர்டு (Oxford) பகுதியில் திங்களன்று பிடிபட்ட வாக்கர், விரைவில் டொராண்டோவிற்கு கொண்டு வரப்படவுள்ளார்.

அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் (First-degree murder) மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன.

ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான 20 வயது கெமியன் பிராங்க்ளின் (Kemyan Franklyn), கடந்த மே 30, 2024 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.