Reading Time: < 1 minute

கனடாவில் மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்தியதுடன், மகள் மற்றும் மகனை படுகொலை செய்த சீக்கிய கணவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

Tamil Business Directory

கனடா மான்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற பகுதியில் கமல்ஜீத் அரோரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரமா ராணி அரோரா.

மகள் மற்றும் மகன் படுகொலை

இந்நிலையில் கமல்ஜீத், தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் தனது மனைவியையும் அடித்து, துன்புறுத்தி, கழுத்து நெரித்து கொல்ல அவர் முயற்சித்து உள்ளார்.

குடும்ப வன்முறை மற்றும் கொலை தொடர்புடைய வழக்கு கமல்ஜீத் மீது பதிவாகி உள்ளதுடன் அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பொலிசாரின் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

அவரது மூத்த மகள், நடந்த சம்பவம் பற்றி அண்டை வீட்டில் வசிக்கும் ஆன்னி சார்பென்டையர் என்பவரிடம் ஓடி சென்று தகவல் அளித்து உள்ளார். அதன்பின்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.