Reading Time: < 1 minute

கனடாவில் மூன்று பேரில் ஒருவர் பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

சுமார் 30 வீதமானவர்கள் மிக மோசமான அல்லது மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தொடக்கம் முதல் இவ்வாறு மக்கள்; பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அங்குஸ் ரெய்ட் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயிரத்து அறுநூறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.