Reading Time: < 1 minute

கனடாவின் எட்மோன்டன் வடக்கு பகுதியில் பௌத்த தியான மண்டபம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று காரணமாக குறித்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூடாரத்தில் சுமார் 100 முதல் 200 பேர் வரையில் சம்பவம் இடம்பெற்றபோது இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.