Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

நோர்த் யோர்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

80 வயதான முதியர் ஒருவரே காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்காப்ரோவில் இடம்பெற்ற மற்றுமோரு போராட்டத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.