Reading Time: < 1 minute

கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவத்தில் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கனடாவின் தென் சிம்கோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குடும்ப பிரச்சினை ஒன்று தொடர்பான சம்பவமொன்று குறித்து விசாரணை நடத்த பொலிஸார் சென்றிருந்த போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரே பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காக இருவரும் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.