கனடாவின் பிரான்ட்பேர்ர்ட் பொலிஸார் பெருமளவு சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் தொடங்கிய விசாரணையின் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை சந்தை மற்றும் ஷெரிடான் வீதிகளுக்கு அருகாமையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது பொலிஸார் 462.6 கிராம் பென்டனில் (Fentanyl), 677 ஹைட்ரோமார்போன் மாத்திரைகள், 175.5 கிராம் மெத்தாம்பெட்டமின், 36.8 கிராம் கோக்கெய்ன், ஸ்டன் கன், லோடு செய்யப்பட்ட கைதுப்பாக்கி, கத்தி, பெரிய அளவு பணம், ஒரு வாகனம் என்பனவற்றை பறிமுதல் செய்ததாக அறிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 113,700 டொலர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது நடைபெற்ற அதே நாளில் இரவு, பிரான்ட்போர்ட் நகரிலுள்ள இரண்டு வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்படைய குற்றச்சாட்டில் 38 வயதா னபிரான்ட்போர்டைச் சேர்ந்த ஒருவரும், 33 மற்றும் 34 வயதான ஹமில்டனைச் சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.