Reading Time: < 1 minute

கனடாவில் 2026-ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 30 பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறையான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கனடிய பெண் கொலை கண்காணிப்பகம்’ (CFOJA) இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 147 பெண்கள் கொல்லப்பட்டனர்.

2019-க்குப் பிறகு கடந்த ஆண்டு உயிரிழப்புகள் சற்றே குறைந்திருந்தாலும், 2020-ஆம் ஆண்டு கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கொலைகளில் பெரும்பாலானவை ஆண்களால், குறிப்பாக நெருங்கிய உறவினர்கள் அல்லது முன்னாள் துணைகளால் செய்யப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான இத்தகைய வெறுப்புணர்வைக் குறிக்க ‘பெண் கொலை’ (Femicide) என்ற சொல்லை கனடிய குற்றவியல் சட்டத்தில் சேர்க்க ‘மசோதா C-16’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இக்கொலைகளை முதல் நிலை கொலையாகக் கருதி கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.