Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா பகுதியில் பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கடற் படையில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

47 வயதான ஜெனிபர் ஸபர்யலோ என்ற ஒட்டாவாவை சேர்ந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டவா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடிய கடற்படை தலைமையகம் இரங்கல் வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக கடப்படை தலைமையகத்தில் குறித்த பெண் பணியாற்றி வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் கடற்படை உத்தியோகத்தர் அவரது வாழ்க்கைத் துணையினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 55 வயதான மைக்கல் ஸபர்யலோ என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.