Reading Time: < 1 minute

கனடாவில் பூனை ஒன்றை தீயிட்டு கொளுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோவின் ஒரில்லா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

ஓரில்லாவின் கோல்போன் மற்றும் மேற்கு வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பூனை ஒன்றின் சடலம் தீக்கிரையாகிக் கிடப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய போது நபர் ஒருவர் பூனையை தீயிட்டுக் கொளுத்தியமை தெரிய வந்துள்ளது.

விசாரணைகளில் போது காணொளி காட்சிகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரில்லா பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிருகவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.