Reading Time: < 1 minute

கனடாவின் மிஸஸாகா பகுதியில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு 20 ஆண்டுகளில் பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tamil Business Directory

16 வயதான சிறுமி ஒருவரையும் 20 வயதான பெண் ஒருவரையும் குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி மிஸஸாகாவில் 20 வயது பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே விதமாக 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் திகதி 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பிரம்டன் பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த இருவரையும் ஒரே நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

43 வயதான ஜஸ்டின் ஃபொலி என்பவரே இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், ஆயுத பயன்பாடு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நபருக்கு எதிராக வழக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.