Reading Time: < 1 minute

கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

டொரன்டோ போலீசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டுன்டாஸ் மற்றும் ப்ளோர் வீதிகளுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வீட்டுக்கு அழைத்த சிலரிடம் குறித்த முதியவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் நிர்வாணமாக தோன்றியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, எதிர்வரும் அக்டோபர் மாதம் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்செயல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அதனை தெரியப்படுத்துமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.