Reading Time: < 1 minute

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும். இந்த சட்டமூலம், மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது.

இந்த சட்ட சட்டமூலத்தை ஆளும் லிபரல் கட்சி மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்தனர்.

இதற்காக கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை குலுக்கியதும், கட்டித்தழுவியதும் அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சட்டலும் மீது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்கு அளிக்க எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் எரின் ஓ டூல் அனுமதி அளித்திருந்தார்.

ஆனாலும், உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு அளித்தது ஆச்சரியம் அளித்தது என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீமஸ் ஓ ரீகன் கருத்து தெரிவித்தார்.