Reading Time: < 1 minute

கனடாவின் ரொறொன்ரோவின் அப்பர் பீச் பகுதியில் பாடசாலை பேருந்தில் மோதுண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிங்ஸ்டன் வீதி கிங்ஸ்வுட் வீதி விக்டோரியா பார்க் அவென்யூவிற்கு அருகாமையில் இந்த விபத்து கடந்த ஒக்டோபர் 9ம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரொறொன்ரோ பொலிசார் கூறுகையில், கிங்ஸ்டன் சாலையில் பாடசாலை பேருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதன் ஓட்டுநர் கிங்ஸ்வுட் சாலையில் வடக்கு நோக்கி இடதுபுறமாக திரும்பி, குறுக்குவழியில் ஒரு பெண்ணை மோதியது.

பாதிக்கப்பட்ட பெண், கிங்ஸ்டன் சாலையில் மேற்கு நோக்கி நடந்து சென்று தெருவின் வடக்குப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார்.

பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.