Reading Time: < 1 minute

கனடாவில் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் எட்டு வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

ஹால்டனின் புர்லிங்டன் இரண்டாம் நிலை மற்றும் மத்திய பொதுப் பாடசாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுமியை வாகனத்தில் மோதிய நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய சிறுமி ஆரம்பத்தில் சுயநினைவுடன் இருந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி இந்தப் பாடசாலைகளின் மாணவியா என்பது பற்றிய விபரங்க்ள வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.