Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டு இழுப்புக்களில் பரிசு வென்ற நான்கு பேர் இதுவரையில் பரிசினை உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

இந்த ஒவ்வொருவரும் தலா ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் பரிசு தொகை வென்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமில்டன், செத்தம் கென்ட், ஒன்றாறியோ ஆகிய மூன்று இடங்களில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களுக்கு பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் இணைய வழியில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்கும் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த பணப்பரிசு வென்றெடுத்தவர்கள் இதுவரையில் தங்களது பரிசினை பெற்றுக்கொள்ளவில்லை என லொத்தர் சபை அறிவித்துள்ளது.