Reading Time: < 1 minute

கனடாவில் பண்ணையில் புகுந்து சில பன்றிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டார்போர்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுரான் ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பண்ணையொன்றில் இவ்வாறு பன்றிகள் களவாடப்பட்டுள்ளன.

இந்த பண்ணையிலிருந்து சுமார் 44 பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பண்ணையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் பண்ணைக்குள் புகுந்து பன்றிகளை களவாடியுள்ளனர். ஒவ்வொரு பன்றியும் சுமார் 60 முதல் 200 பவுண்ட்கள் எடையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையிடப்பட்ட பன்றிகளின் மொத்தப் பெறுமதி 12000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.