Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமையாற்றி வந்த மோப்ப நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.

Tamil Business Directory

போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றின் போது போதைப்பொருள் அதிக அளவில் நுகர நேரிட்டதனால் இந்த நாய் உயிரிழந்துள்ளது.

டாஸ் என்ற பெயருடைய நாயே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அதிகளவு போதை பொருள் நுகர நேரிட்டதனால் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்து கொண்ட இரண்டு மோப்ப நாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதில் டாஸ் என்ற மோப்ப நாய் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாய்களையும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் டாஸ் என்ற மோப்பனாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந்த தேடுதல் வேட்டையின் போது போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் ஸ்டார்ட்போர்ட் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.