Reading Time: < 1 minute

கனடாவின் பெய்ரே பகுதியில் நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

Tamil Business Directory

டேவிட் மெக்டொனால்ட் என்ற நபர் தனது நாயுடன் நடந்து சென்றுள்ளார். இதன் போது மூன்று இளையர்கள் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூவரும் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்துக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கின்றார்.

இதன் போது மெக்டொனால்ட், நாற்காலிகளை உடைக்க வேண்டாம் என இளைஞர்களிடம் கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த நபருக்கும் நாற்காலிகளை உடைத்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாற்றமடைந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும், தற்பாதுகாப்பு அடிப்படையில் தாம் நடந்து கொண்டதாகும் இதன்போது ஒருவர் கத்தியால் தாக்கியதாகவும் தெரிவிக்கின்றார்.

தனது நாயை கத்தியால் குத்த முயற்சித்த போது அதனை தடுப்பதற்கு முயன்ற சந்தர்ப்பத்தில் இரண்டு தடவைகள் கத்திக்குத்திக்கு இலக்கானதாக அவர் தெரிவிக்கின்றார்.

கத்திக்குத்து நடத்திய நபர்கள் தப்பிச் சென்றதாக மெக்டொனால்ட் தெரிவிக்கின்றார்.