Reading Time: < 1 minute

கனடாவில் பெருந்தொகை நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

கனடாவில் ரெக்ஸ்டேல் பகுதியில் அண்மையில் இவ்வாறு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் மூன்று லட்சம் டாலர்கள் பெறுமதியான ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்பியோன் மற்றும் 27ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் ஜன்னலை உடைத்து அதிலிருந்து ஆபரணங்களைக் கொண்ட பை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.