Reading Time: < 1 minute

கனடாவின் குபெக் மாகாணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சேவைவர் ( Survivor reality TV show ) என்ற ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஆசிரியை பங்கேற்பதற்காக சென்ற காரணத்தினால் பணி நீக்கப்பட்டுள்ளார்.

டெபோரா டி பரக்லீர் என்ற ஆசிரியையே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார்.

அனுமதியின்றி விடுமுறை பெற்றுக்கொண்டதன் காரணமாக இவ்வாறு குறித்த ஆசிரியை பணி நீக்கப்பட்டுள்ளார்.

தீவு ஒன்றில் 20 போட்டியாளர்களில் யார் இறுதி வரையில் போராடி தீவில் தங்கியிருக்கின்றார்களோ அவர்களே இந்தப் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.