Reading Time: < 1 minute

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Business Directory

நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், கனடாவில் மொத்தமாக 35 ஆயிரத்து 56 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளதடன் இதுவரை அங்கு ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைவிட, 11 ஆயிரத்து 843 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 21 ஆயிரத்து 626 பேர் சாதாரண பிரிவிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கனடாவில் இதுவரை, 5 இலட்சத்து 36 ஆயிரத்து 62 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 18 ஆயிரத்து 357 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 10 ஆயிரத்து 578 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அல்பேர்டாவில் 2 ஆயிரத்து 562 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 618 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளதுடன் கடந்த நாட்களை விட பாதிப்பு குறைந்துள்ளது.