Reading Time: < 1 minute

கனடாவில் தீவிரவாத தாக்குதல் முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிறுவன் ஒருவன் கைது செய்பய்பட்டுள்ளான்.

Tamil Business Directory

யூத சமூகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒட்டாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சிறுவனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவனை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாகவும், தற்பொழுது விளக்க மறியலில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இடம்பெற்று வரும் பின்னணியில் யூதர்கள் மீது மதக் குரோத அடிப்படையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத தாக்குதல் முயற்சிகளுக்கு இந்த சிறுவன் உதவியதாகவும், பதின்ம வயது சிறுவன் என்பதனால் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.