கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்ல வாசிகளுக்கு அளவுக்கு அதிகமாக மருந்தளித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு தாதி நான்கு வாரங்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கம்லூப்ஸைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட தாதி லையன் பியுசென்ஸ், ஒப்பந்தத்தில் இணைந்து தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.
2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜனவரி வரை ஏற்பட்ட நடைமுறை குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 20ஆம் திகதி ஒப்புதல் பெற்ற விசாரணைக் குழுவின் முடிவின்படி, பராமரிப்பு இல்ல வாசிகளுக்கு தேவையான ஆவணப்படுத்தல் இல்லாமல் மற்றும் மருத்துவ ஆலோசகரிடம் தகவல் தெரிவிக்காமல் அதிக அளவில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
மாகாணத்தின் தாதி பதிவின்படி, பியூஷேன் கம்லூப்ஸில் உள்ள பராமரிப்பு மையமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அல்லது வழங்கப்பட்ட மருந்துகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவர் தன்னார்வமாக நான்கு வாரங்களுக்கு தனது தாதி அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரது மருத்துவ பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.